உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

புதன்கிழமை பொது விடுமுறை; தனியார் துறையினரால் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த பயணிகள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிபொருள் நெருக்கடியை முன்னெச்சரிக்கையாக கையாளுவதற்கு அரசாங்கம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையை பொது விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், இன்றையதினம் பொதுப் போக்குவரத்தில் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்திற்கு அமைய, போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ள போதிலும் சிக்கன நடவடிக்கையாக இன்று புதன்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்றைய தினம் பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் கணிசமான அளவு மட்டுப்படுத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அரசுத் துறைக்கு விடுமுறை வழங்கப்பட்ட போதிலும், நாட்டின் பெரும்பாலான தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இன்று வழமை போல் இயங்கியுள்ளன. இதனால், தனியார் துறையைச் சேர்ந்த பெருமளவிலான ஊழியர்கள் இன்று காலை பணிக்குச் செல்வதற்காகப் பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் திரண்டிருந்தனர்.

சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், குறைந்தளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்களே இயக்கப்பட்டமையால், அவற்றில் அதிகளவிலான பயணிகள் முண்டியடித்துக் கொண்டு பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதனால் அரசினால் எதிர்பார்க்கப்பட்ட போக்குவரத்து நெரிசல் குறைப்பு மற்றும் எரிபொருள் சிக்கனம் ஆகிய இலக்குகள், தனியார் துறையின் தொடர்ச்சியான இயக்கம் காரணமாக இன்றைய தினம் சவாலுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

62 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

65 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

67 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

58 0 0