உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
68 பார்வைகள்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று(18) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று காலை கொடிச்சீலையானது கடல் நாச்சியம்மன் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஆலயத்தில் கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் நடைபெற்றது.

சுமார் 500 வருடங்களுக்கு மேல் பழமையான இந்த ஆலயமானது கிழக்கு மாகாணத்தில் பழமையானதும் தொன்மையானதுமான ஆலயங்களில் ஒன்றாகவும் அற்புதங்கள் நிறைந்த ஆலயமாகவும் உள்ளது.

ஆலயத்தில் கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் நடைபெற்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள விநாயகப்பெருமானுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று கொடிச்சீலையும் உற்சவ மூர்த்தியும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கொடித்தம்பத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

கொத்தம்பத்தில் நடைபெற்ற விசேட பூஜைகள் வழிபாடுகளை தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோசத்துடனும் நாத வேதபராயணம் முழங்க மேளதாள இசையுடனும் கொடியேற்றம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கொடியேற்றத்தினை தொடர்ந்து கணேசாலயா நாட்டியபள்ளி மாணவர்களின் நடன ஆற்றுகையும் நடைபெற்றதை தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா நடைபெற்றது.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து 12 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும். தினமும் தம்ப பூஜை, வசந்தமண்டப பூஜை, சுவாமி உள்வீதி, வெளிவீதியுலா நடைபெறும்.

குறிப்பாக முக்கிய திருவிழாக்களான மாம்பழத் திருவிழா, திருவேட்டைத் திருவிழா 31ஆம் திகதி தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளதுடன் மறுநாள் 01ஆம் திகதி சமுத்திர தீர்த்தோற்சவமும் பொன்னூஞ்சலும் நடைபெற்று கொடியிறக்கத்துடன் உற்சவம் நிறைவுபெறும்.

மகோற்சவ கால கிரியைகள் அனைத்தும் பிரம்மஸ்ரீ நித்திய சிவானந்தக்குருக்கள் தலைமையில் வெகுவிமர்சையாக நடைபெற்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

124 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0