உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் கொட்டகலை பிரதேசத்தில் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் முகாமையாளர் எஸ்.லோரன்ஸுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

வேல்ட்விஷன் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பில்,
தற்போது பல இடங்களில் குடிநீர்ப் பிரச்சனை பாரிய சவாலாக மாறியுள்ளது. எனவே, குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான பல்வேறு திட்டங்களை வகுப்பது தொடர்பில் பேசப்பட்டதுடன் குறிப்பாக கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பல இடங்களிலே வேர்ல்ட் விஷன் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டு, அவர்களது பராமரிப்பிலே இருக்கின்ற குடிநீர் வழங்கல் வேலைத்திட்டங்களை முறையாக பிரதேச சபைக்கு பொறுப்பெடுத்து அதனூடாக மக்களுக்கு துரிதமான நீர் விநியோகச் சேவையினை வழங்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டது.

மேலும், எதிர்காலத்தில் பல குடிநீர் விநியோகத் திட்டங்களையும் சபையுடன் இணைந்து செயல்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களிலே பிரதேச சபையின் பங்களிப்பைப் பெற்று பல புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வேல்ட்விஷன் நிறுவனத்திற்கு சொந்தமான நீர்த்தாங்கி ஒன்றையும் கொட்டகலை பிரதேச சபைக்கு பெற்றுக் கொடுப்பதற்கு வேர்ல்ட் விஷன் நிறுவனத்தினால் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் வேர்ல்ட் விஷன் நிறுவனமும் கொட்டகலை பிரதேச சபையும் இணைந்து பல நலன்புரிச் சேவைகளை பொதுமக்களுக்கு செய்வதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

61 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

65 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

56 0 0