உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

எரிவாயு விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்கு நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

நாட்டில் எரிவாயு விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து லிட்ரோ நிறுவனம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்,

பிராந்தியத்திற்கு ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு ஏற்றிய கப்பல் வந்தடைவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் நிலையான விநியோகம் உறுதிப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான போதியளவு எரிவாயு கையிருப்பில் உள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.

தற்போதைய மேலதிக எரிவாயு இருப்புக்கள் மாலைதீவில் உள்ள சேமிப்பு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவிலிருந்து 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் விரைவில் மாலைதீவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே அளவு எரிவாயுவைக் கொண்ட மற்றொரு கப்பல் ஏப்ரல் 20ஆம் திகதி வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேசியத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், எந்தவித இடையூறுமின்றி விநியோகத்தைத் தொடர்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சன்ன குணவர்தன பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

61 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

65 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

55 0 0