குருக்கள்மடம் மனிதப்புதைகுழி: நீதிபதி தலைமையில் விசேட கள ஆய்வு.!
மட்டக்களப்பின் குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனித புதைகுழியை இன்று (17) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. பிரதீபன் தலைமையில் விசாரணை குழு நேரில் ஆய்வு செய்தது.1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்து கல்முனை வழியாக காத்தான்குடி நோக்கி பயணித்த முஸ்லிம் பயணிகள் விடுதலைப்புலிகளால் இடை மறிக்கப்பட்டு, குருக்கள்மடம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் ஒரு பகுதியாக இந்த கள விஜயம் நடைபெற்றது.
ஆய்வுக் குழுவில் பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். சம்பந்தப்பட்ட இடம் தற்போது பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் கூறியதன்படி, மனித புதைகுழி தொடர்பான முதல் கட்ட அகழ்வாய்வுபணிகள் எதிர்வரும் மார்ச் 30ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிரூபிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் நடைபெறும் இந்த அகழ்வாய்வுக்காகவே விசேட கள விஜயம் நடத்தப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.