உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மட்டுப்படுத்தப்படும் பொது போக்குவரத்து சேவைகள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

நாளை முதல் மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாளில் நாட்டின் பொது போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மட்டுமே இயங்கும் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அரச விடுமுறையையொட்டி, அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெரும்பாலானோர் விடுமுறையில் இருப்பதால் பயணிகள் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், பேருந்து மற்றும் ரயில் சேவைகள் வழக்கமான நாட்களை விட குறைந்த அளவில் இயக்கப்பட உள்ளன.பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு தேவையற்ற சிரமங்களை தவிர்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய சேவைகள் தொடர்பான போக்குவரத்து நடவடிக்கைகள் வழக்கம் போல் முன்னெடுக்கப்படும் என்றும், பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச சேவைகள் உறுதி செய்யப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அரச விடுமுறையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களது பயண ஏற்பாடுகளை சரியான முறையில் திட்டமிட்டு செயல்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

61 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

66 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

56 0 0