உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பெண்ணிற்கு பிணை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
69 பார்வைகள்

மன்னாரில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவரை இன்றையதினம் திங்கட்கிழமை (16) மதியம் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது குறித்த பெண்ணை தலா 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் செல்ல மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.

போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை அப்புறப்படுத்துவதற்கு உதவியதாக கூறி, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு ஒரு சந்தேக நபரைக் கைது செய்துள்ளது.

தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர், அதிலிருந்து பெறப்பட்ட வருமானத்தைக் கொண்டு ஒரு மாடிக் குடியிருப்பு, ஐந்து அறைகளைக் கொண்ட வீடு, ஒரு கார் மற்றும் சுமார் 360 பவுண்கள் எடையுள்ள தங்க நகைகள் வாங்கியுள்ளதாக கிடைத்த புகாரின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டு, பின்னர் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்ட பின்னர், சட்டவிரோத நிதியை பயன்படுத்தி வாங்கியதாகக் கருதப்படும் இரண்டு வீடுகள் மற்றும் கார் தொடர்பாக மன்னார் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சொத்துக்களை முடக்குவதற்கான நீதிமன்ற உத்தரவுகள் பெறப்பட்டது. மேலும் அந்த உத்தரவுகளை தொடர்ந்து நடைமுறையில் வைத்திருக்க நீட்டிப்புகள் கோரப்பட்டுள்ளன.

சந்தேக நபரின் மாமியாரான குறித்த பெண் பல நிதி நிறுவனங்களில் தங்க நகைகளை அடகு வைத்து, பின்னர் மன்னார் பகுதியிலுள்ள பல நகைக் கடைகளுக்கு அவற்றை விற்றுள்ளார் என்பது மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட தங்க நகைகளை, அவற்றின் தோற்றத்தை அறிந்திருந்தே அடகு வைத்து விற்றதன் மூலம் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக, குறித்த பெண் நேற்றைய தினம் (15) மன்னாரில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான மன்னாரைச் சேர்ந்த 66 வயதுடைய குறித்த பெண்ணிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை (16) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த பெண்ணை தலா 20 மில்லியன் பெறுமதியான இரு சரீர பிணையில் செல்ல உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி விசாரணைகளுக்காக திகதியிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் மஹிந்த கஹந்தகம கைது.!

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

55 0 0
இலங்கை செய்திகள்

வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு.!

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவர்லி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர் உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சம்பளக் கொடுப்பனவு தொடர்பான…

68 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

இஸ்லாம் மார்க்கத்தை அவமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும்…

79 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!

பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று 5 ஆம் திகதி நள்ளிரவு 11.50 இடம்பெற்றுள்ளது என பொகவந்தலாவ பொலிஸ்…

71 0 0