உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

போதைப்பொருள் ஒழிப்பில் அதிரடி; ஒரே நாளில் 906 பேர் சிக்கினார்கள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய, போதைப்பொருள் அற்ற தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 906 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சுற்றிவளைப்புகள் குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது:-

நேற்று ஒரே நாளில் மாத்திரம் 965 சுற்றிவளைப்புச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பான விசாரணைகளுக்கமைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான 4 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பெருமளவிலான போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 510 கிராம் ஹெரோயின், 788 கிராம் ஐஸ், 70 கிலோகிராம் 264 கிராம் கஞ்சா, 11 ஆயிரத்து 38 கஞ்சா செடிகள், 5 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 70 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 1,783 போதை மாத்திரைகள், 930 கிராம் மதனமோதகம் மற்றும் 319 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசின் இந்தத் தேசிய திட்டத்தின் கீழ் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

43 0 0
இலங்கை செய்திகள்

யாழில் நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் செயற்படுகின்றன!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும்…

46 0 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

51 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

53 0 0