உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

மட்டக்களப்பில் “Red Thread” திட்டத்தின் கீழ் குருதிக்கொடை முகாம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
40 பார்வைகள்

மட்டக்களப்பில் Rotaract Club of Batticaloa அமைப்பினால் “The Red Thread” என்ற சமூக சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக குருதிக்கொடை முகாம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்நிகழ்வு 2026 மார்ச் 14 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் ICBT Campus, மட்டக்களப்பு வளாகத்தில் நடைபெற்றது.

சமூக நலனுக்காக பலர் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு இரத்த தானம் செய்து நோயாளிகளின் உயிர் காக்கும் பணியில் பங்களித்தனர்.

இந்த திட்டம் Rotaractor David Shiyam Kirupainayagam, Rotaract Club of Batticaloa அமைப்பின் தலைவர் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வு Batticaloa Teaching Hospital – National Blood Transfusion Unit உடன் இணைந்து பாதுகாப்பான முறையில் இரத்த சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலும் Brandix Batticaloa Pvt Ltd நிறுவனம் நிகழ்விற்கு ஆதரவாளராகவும், ICBT Campus Batticaloa நிகழ்விற்கான இடத்தை வழங்கியும் ஒத்துழைப்பு வழங்கின.

“Red Thread” என்பது தலசீமியா (Thalassaemia) நோயால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இரத்த தானத்தை ஊக்குவிக்கவும் தீவு முழுவதும் 18 ரோட்டராக்ட் கழகங்களால் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும் சமூக சேவை திட்டமாகும்.

இந்த இரத்த தான முகாமை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைத்து தன்னார்வலர்கள், இரத்த தானதாரர்கள் மற்றும் ஒத்துழைப்பாளர்களுக்கு Rotaract Club of Batticaloa தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

43 0 0
இலங்கை செய்திகள்

யாழில் நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் செயற்படுகின்றன!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும்…

46 0 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

51 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

53 0 0