உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

மான் மற்றும் குளுமாட்டு இறைச்சிகளுடன் இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

பொத்துவில் பிரதேசத்தில் பானமை சாஸ்திரவேல பகுதியில் கார் ஒன்றில் மான் மற்றும் குளுமாட்டு இறைச்சிகளை கடத்திய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பானமை வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் மற்றும் குமண தேசிய பூங்காவின் வனவிலங்கு அதிகாரிகள், சாஸ்திரவேல விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து நேற்று (14) மேற்கொண்ட சோதனையின் போது, 70 கிலோ கிராம் காட்டெருமை (குளுமாடு) மற்றும் மான் இறைச்சிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

வெள்ளை நிற கார் ஒன்றில் இவ் இறைச்சியைக் கடத்திச் சென்றபோது, பானமை சாஸ்திரவேல பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது இறைச்சியை எடைபோடப் பயன்படுத்திய தராசு ஒன்றும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரும் கைப்பற்றப்பட்டன.

அத்துடன் படகுகள் மூலம் சென்று வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்து வந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று ( 14) பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 2026.03.24 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த சுற்றிவளைப்பில் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளான பி.எம்.ஜி.சி. பண்டார, டி.எம்.டி.எல். திஸாநாயக்க, உதவி அதிகாரி விக்கிரமரத்ன, வனவிலங்கு கட்டுப்பாட்டாளர் கே. ஹனோஜன், கள உதவியாளர் ஆர்.எம். லக்ஷ்மன், சாரதிகளான அத்தநாயக்க மற்றும் ரசிக ஆகியோருடன் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

43 0 0
இலங்கை செய்திகள்

யாழில் நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் செயற்படுகின்றன!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும்…

46 0 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

51 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

53 0 0