உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தாமதம்.!

சினிமா 7 மாதங்கள் முன்
75 பார்வைகள்

இயக்குநர் வினோத் இயக்கத்தில், பிரபல நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள விஜய்யின் இறுதித் திரைப்படம் இது எனக் கூறப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

இந்நிலையில், திரைப்படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமை தொடர்பில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியிடப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்களால் வெளியீடு தாமதமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த மார்ச் 9ஆம் திகதி நடைபெறவிருந்த மறுதணிக்கை நடவடிக்கை, அதிகாரி ஒருவரின் உடல்நலக் குறைபாடு காரணமாக எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்த பின்னரே இந்த திரைப்படம் வெளியாகக்கூடும் என்ற தகவலும் திரை வட்டாரங்களில் பரவி வருகின்றது.இதற்கிடையில் நீண்டகால தாமதம் காரணமாக, சுமார் 120 கோடி ரூபாவிற்கு இந்த திரைப்படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமையை பெற்றிருந்த நிறுவனம் அந்த ஒப்பந்தத்தை தற்போது ரத்து செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் பின்னணியைக் கொண்டதாகக் கூறப்படும் இந்த திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாக நிலவும் இழுபறி திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டீஸர் வெளியீடு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அனிருத் இசையமைப்பில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா…

57 0 0
சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

59 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

67 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

83 0 0