‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டீஸர் வெளியீடு
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அனிருத் இசையமைப்பில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்த இந்த திரைப்படம், உலகம் முழுவதும் சுமார் 600 முதல் 650 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தின் திரை முன்னோட்டத்தை தயாரிப்பு நிறுவனம், உத்தியோகபூர்வமாக இணையத்தில் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த திரை முன்னோட்டம், ‘டைகர் முத்துவேல் பாண்டியன்’ கதாபாத்திரத்தில் வரும் நடிகர் ரஜினிகாந்த் டாக்ஸி ஒன்றை வைத்திருக்கும் நபராகத் தோன்றுகிறார்.
இதில் அவர் எதிரிகளுடன் அதிரடியாகச் சண்டையிடும் காட்சிகளும், பின்னர் அமைதியாகத் தனது உந்துருளியை துணியால் துடைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்த இரண்டாம் பாகத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ள நிலையில், அவர் ரஜினிக்கு எதிராக மோதும் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.