உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

சினிமா 20 மணி நேரம் முன்
81 பார்வைகள்

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர் மன்றச் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், தனது ஆரம்பகாலத் திரைப் பயணம் மற்றும் சந்தித்த சவால்கள் குறித்துத் திறந்தமனதுடன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

அவர் பேசுகையில், தானும் நடிகர் விஜய் சேதுபதியும் எந்தவித சினிமா பின்புலமும் (background) இல்லாமல், சொந்த உழைப்பை மட்டுமே நம்பித் திரையுலகிற்கு வந்து இன்று நடிகர்களாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், தான் திரையுலகிற்கு வர முயன்றபோது மிமிக்கிரி கலைஞராகவோ அல்லது சின்னத்திரை தொகுப்பாளராகவோ இருக்கும் ஒருவரால் சினிமா கதாநாயகனாக வர முடியாது என்று பலர் கூறியதாகவும், ஆனால் அவர்களின் அந்த வார்த்தைகளைப் பொய்யாக்கி அவர்கள் மத்தியிலேயே இன்று ஒரு வெற்றிகரமான நடிகராக உயர்ந்து காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சின்னத்திரையில் தொகுப்பாளராகத் தொடங்கி, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயனின் இந்தப் பேச்சு, திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விடாமுயற்சியும் உழைப்பும் இருந்தால் சினிமா பின்புலம் இன்றியும் சாதிக்க முடியும் என்பதற்குத் தானும் விஜய் சேதுபதியுமே சான்று என அவர் குறிப்பிட்டது, அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

65 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

69 0 0
சினிமா

நவம்பர் 20ஆம் திகதி வெளியாகும் ‘சத்தியவான் சாவித்திரி’

கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரவீன்…

65 0 0
சினிமா

“உங்களின் உழைப்பிற்கு இந்த வெற்றி நிச்சயமாகத் தகுதியானது” : ஜேசன் சஞ்சைக்கு ஜோதிகா வாழ்த்து

திரையுலகில் வளர்ந்து வரும் இளம் கலைஞரின் ‘சிக்மா’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் சுவாரசியமாக நடைபெற்று வரும் நிலையில், முன்னணி நடிகை ஜோதிகா அந்த படக்குழுவினருக்குத் தனது மனமார்ந்த…

97 0 0