உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

இஸ்ரேல் – அமெரிக்காவுக்கு ஆதரவாக கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், கொழும்பில் நேற்று (09) விசேட கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தலைமையிலான சிறிய குழுவொன்றினால், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகளின் தேசியக் கொடிகளை ஏந்தியிருந்ததுடன், தற்போதைய போரில் அந்த நாடுகளின் நிலைப்பாட்டுக்கு ஆதரவான கோஷங்களையும் எழுப்பினர்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பத்தரமுல்லே சீலரத்ன தேரர்,
“இலங்கையில் உள்நாட்டுப் போர் நிலவிய காலப்பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளுமே எமக்கு ஆதரவு வழங்கின. அதனை நாம் மறக்கவில்லை. எனினும், தற்போதைய உலக அரசியல் சூழலில் நாம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் பக்கமே நிற்கின்றோம்.” – என்றார்.

மத்திய கிழக்கு பதற்றத்தைத் தொடர்ந்து, ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களைக் கண்டித்து இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இவ்வாறானதொரு பின்னணியிலேயே, அதற்கு மாற்றமாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்து இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்தத் திடீர் போராட்டத்தையடுத்து அமெரிக்கத் தூதரகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை; அவசர எச்சரிக்கை.!

முகநூல் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும்…

47 0 0
இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு இடமளிக்காமல் வெட்டிய அமைச்சர்கள்.!

ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் இடைநடுவில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் வெளியேறியமை ஊடகவியலாளர்களிடம் அதிருப்தியை…

37 0 0
இலங்கை செய்திகள்

முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே மக்கள் 2/3 பெரும்பான்மை ஆணை வழங்கினர்.!

தற்போதைய அரசுக்கு நாட்டு மக்கள் வழங்கிய 2/3 பெரும்பான்மை மக்கள் ஆணை என்பது பழைய சட்டங்களுக்குள் அடைபட்டு நிற்பதற்காக வழங்கப்பட்டது அல்ல என்றும், தேவைப்பட்டால் புதிய சட்டங்களை…

39 0 0
இலங்கை செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் இவ்வருடம் முழுமையாக இரத்து.!

பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாகவுள்ளது என்றும், இந்தச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என்றும் நீதி…

65 0 0