உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

பயங்கரவாதத் தடைச் சட்டம் இவ்வருடம் முழுமையாக இரத்து.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
64 பார்வைகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாகவுள்ளது என்றும், இந்தச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் நீக்கம் தொடர்பில் ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த 1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்றளவும் அமுலில் உள்ளது. நாட்டின் வரலாற்று ரீதியான பல முரண்பாடுகளுக்கு இந்தச் சட்டமே பிரதான காரணியாக அமைந்துள்ளது.

இதன் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான குறைபாடுகள் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஆட்சிக்கு வந்தவுடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு இணங்க, தேசிய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு புதிய சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட நிபுணத்துவக் குழுவின் முதனிலைச் சட்ட வரைவின் அடிப்படையில், ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாத்தல்’ எனும் சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்துக்குச் சட்டமா அதிபர் அனுமதி அளித்துள்ளார். வெகுவிரைவில் இது வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டு, முதலாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய குற்றங்கள் மற்றும் பூகோள பயங்கரவாதச் செயற்பாடுகளைக் கருத்தில்கொண்டு, புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை அனைத்துத் தரப்பினரும் வழங்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை; அவசர எச்சரிக்கை.!

முகநூல் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும்…

45 0 0
இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு இடமளிக்காமல் வெட்டிய அமைச்சர்கள்.!

ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் இடைநடுவில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் வெளியேறியமை ஊடகவியலாளர்களிடம் அதிருப்தியை…

36 0 0
இலங்கை செய்திகள்

முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே மக்கள் 2/3 பெரும்பான்மை ஆணை வழங்கினர்.!

தற்போதைய அரசுக்கு நாட்டு மக்கள் வழங்கிய 2/3 பெரும்பான்மை மக்கள் ஆணை என்பது பழைய சட்டங்களுக்குள் அடைபட்டு நிற்பதற்காக வழங்கப்பட்டது அல்ல என்றும், தேவைப்பட்டால் புதிய சட்டங்களை…

37 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது.!

நவகமுவ கொரதொட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நவகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட விசேட…

68 0 0