உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

இலங்கை மின்சார சபையில் அதிரடி மாற்றம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
46 பார்வைகள்

இலங்கை மின்சாரச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சீர்திருத்தங்களுக்கு அமைய, இலங்கை மின்சார சபையினால் (CEB) இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த மின் விநியோகப் பணிகள் இனி எலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா (பிரைவேட்) லிமிடெட் (EDL) நிறுவனத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சக்தித் துறை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார விநியோகக் கட்டமைப்பை நவீனமயமாக்குவதும், அதன் வினைத்திறனை அதிகரிப்பதும் இதன் பிரதான நோக்கமாகும்.

மின் விநியோகத் துறையில் பின்வரும் முக்கிய மாற்றங்களை நடைமுறைப்படுத்த EDL நிறுவனத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது:மின் விநியோகத்தில் ஏற்படும் தாமதங்களைக் குறைத்தல்.,தடையற்ற மின்சார வழங்கலை உறுதி செய்தல்,நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மின்சாரக் கட்டமைப்பை மேம்படுத்துதல்.இந்த நிறுவனத்தின் முக்கிய இலக்கு என தெரிவிக்கப்டுகிறது

இந்தச் சீர்திருத்தத்தின் மூலம் பொதுமக்கள் தமக்குத் தேவையான மின்சார சேவைகளை விரைவாகவும், இலகுவாகவும் பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட (Customer-Centric) ஒரு சேவை கலாசாரத்தை உருவாக்குவதன் மூலம், பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க EDL நிறுவனம் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மின்சக்தித் துறையில் ஏற்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம், எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணக் குறைப்பு மற்றும் சிறந்த சேவைகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை; அவசர எச்சரிக்கை.!

முகநூல் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும்…

47 0 0
இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு இடமளிக்காமல் வெட்டிய அமைச்சர்கள்.!

ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் இடைநடுவில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் வெளியேறியமை ஊடகவியலாளர்களிடம் அதிருப்தியை…

37 0 0
இலங்கை செய்திகள்

முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே மக்கள் 2/3 பெரும்பான்மை ஆணை வழங்கினர்.!

தற்போதைய அரசுக்கு நாட்டு மக்கள் வழங்கிய 2/3 பெரும்பான்மை மக்கள் ஆணை என்பது பழைய சட்டங்களுக்குள் அடைபட்டு நிற்பதற்காக வழங்கப்பட்டது அல்ல என்றும், தேவைப்பட்டால் புதிய சட்டங்களை…

39 0 0
இலங்கை செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் இவ்வருடம் முழுமையாக இரத்து.!

பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாகவுள்ளது என்றும், இந்தச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என்றும் நீதி…

65 0 0