உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
42 பார்வைகள்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 7,500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு 2026 ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.அதன்படி, 2026 ஜனவரி மாதத்திற்குரிய 10,000 ரூபாய் புலமைப்பரிசில் கொடுப்பனவு நாளை மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.


மஹபொல நம்பிக்கை நிதியம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் மூலம் திறைசேரி கூட்டாக இந்த புலமைப்பரிசில் கொடுப்பனவிற்கு நிதியளிக்கிறது.தற்போதைய ஏற்பாடுகளின்படி, 48 வீதம் மஹபொல நம்பிக்கை நிதியத்தாலும், 52 வீதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக அரசாங்கத்தாலும் வழங்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை; அவசர எச்சரிக்கை.!

முகநூல் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும்…

47 0 0
இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு இடமளிக்காமல் வெட்டிய அமைச்சர்கள்.!

ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் இடைநடுவில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் வெளியேறியமை ஊடகவியலாளர்களிடம் அதிருப்தியை…

37 0 0
இலங்கை செய்திகள்

முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே மக்கள் 2/3 பெரும்பான்மை ஆணை வழங்கினர்.!

தற்போதைய அரசுக்கு நாட்டு மக்கள் வழங்கிய 2/3 பெரும்பான்மை மக்கள் ஆணை என்பது பழைய சட்டங்களுக்குள் அடைபட்டு நிற்பதற்காக வழங்கப்பட்டது அல்ல என்றும், தேவைப்பட்டால் புதிய சட்டங்களை…

39 0 0
இலங்கை செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் இவ்வருடம் முழுமையாக இரத்து.!

பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாகவுள்ளது என்றும், இந்தச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என்றும் நீதி…

65 0 0