உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

தங்கக் கடத்தலை அதிரடியாக முறியடித்த கடற்படை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

யாழ்ப்பாணம், மாதகல் கடல் வழியாகப் படகு மூலம் இந்தியாவுக்குப் பெருந்தொகைத் தங்கத்தைக் கடத்திச் செல்ல முயன்ற இருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சுமார் 6 கிலோவுக்கும் அதிக எடையுடைய தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

மாதகல் கடற்பரப்பினூடாகச் சர்வதேச கடல் எல்லை வழியாகத் தங்கம் கடத்தப்படுவதாகக் கடற்படையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகொன்றை நடுக்கடலில் வழிமறித்துச் சோதனையிட்டனர்.

கடற்படையினரின் தீவிர சோதனையின் போது, அந்தப் படகிலிருந்து 6 கிலோ 85 கிராம் எடையுடைய தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் காங்கேசன்துறை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான கடல் மார்க்கக் கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வடக்குக் கடற்பரப்பில் கடற்படையினர் தமது கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை; அவசர எச்சரிக்கை.!

முகநூல் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும்…

47 0 0
இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு இடமளிக்காமல் வெட்டிய அமைச்சர்கள்.!

ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் இடைநடுவில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் வெளியேறியமை ஊடகவியலாளர்களிடம் அதிருப்தியை…

37 0 0
இலங்கை செய்திகள்

முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே மக்கள் 2/3 பெரும்பான்மை ஆணை வழங்கினர்.!

தற்போதைய அரசுக்கு நாட்டு மக்கள் வழங்கிய 2/3 பெரும்பான்மை மக்கள் ஆணை என்பது பழைய சட்டங்களுக்குள் அடைபட்டு நிற்பதற்காக வழங்கப்பட்டது அல்ல என்றும், தேவைப்பட்டால் புதிய சட்டங்களை…

39 0 0
இலங்கை செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் இவ்வருடம் முழுமையாக இரத்து.!

பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாகவுள்ளது என்றும், இந்தச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என்றும் நீதி…

65 0 0