உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மட்டக்களப்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
68 பார்வைகள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு, வாகரை காரமுனைப் பகுதியில் மகளிர் தின நிகழ்வு இன்று 08.03.2026 வெகு சிறப்பாக நடைபெற்றது.

​சமூக செயற்பாட்டாளர் திருமதி ரஜனி ஜெயப்பிரகாஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெண்களின் உரிமைகள் மற்றும் சமூக மேம்பாடு குறித்த பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன.

​​இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ​வைத்தியர் இ.சிறிநாத், ஞா.சிறிநேசன், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ​கலாநிதி திருமதி சுஜாராஜினி வரதராஜன், ஓய்வுநிலை ஆசிரியர் மற்றும் வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் திருமதி சரஸ்வதி விஜயநாதன், பாடுமீன் சுவஹாஸ் பூ வளர்ப்போர் சங்க ஆலோசகர் திருமதி பிரபா செல்வராசா,
கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பெண்களின் சமூகப் பங்களிப்புகள் கௌரவிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

​மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேச பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வும் இதன்போது ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

122 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0