உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

எரிபொருள் தட்டுப்பாட்டை காரணம் காட்டி அறுவடை இயந்திரங்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டாம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
56 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தில் போதியளவு எரிபொருட்கள் கையிருப்பில் உள்ளமையினால் விவசாயிகள் அறுவடை செய்கின்ற நெல்லை இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டாம் எனவும், உலர வைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி நெல்லைப் பாதுகாக்குமாறும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (4) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக எரிபொருட்களுக்கான நெருக்கடி நிலைமை காணப்பட்டது. இந்த நிலையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் அடிக்கடி தொடர்பில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் கலந்தாலோசித்த பிறகு, மன்னார் மாவட்டத்திற்கு தேவையான டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவை தற்போது போதியளவு கையிருப்பில் உள்ளன.

தற்போது நெல் அறுவடை காலம் என்பதால், அறுவடை இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி வழங்குமாறு எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி, அறுவடை இயந்திரங்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விவசாயிகள் இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டாம் என்றும், உலர வைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி நெல்லைப் பாதுகாக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தனியார் மற்றும் அரசு பேருந்துகளுக்குத் தேவையான எரிபொருள் தாராளமாக வழங்கப்படுவதால், பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி பயணங்களை மேற்கொள்ள முடியும்.

கடற்றொழிலுக்கு தேவையான மண்ணெண்ணெய் விநியோகம் தடையின்றி நடைபெறுகிறது. மீனவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக் கொள்ளலாம்.

எரிபொருள் விநியோகம் தொடர்பாக ஏதேனும் சிரமங்கள் அல்லது புகார்கள் இருந்தால், மாவட்டச் செயலகம் மற்றும்
விவசாயிகள் கமலநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்திலும், மீனவர்கள் கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் அலுவலகத்திலும் முறைப்பாடு தெரிவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் மஹிந்த கஹந்தகம கைது.!

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

55 0 0
இலங்கை செய்திகள்

வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு.!

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவர்லி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர் உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சம்பளக் கொடுப்பனவு தொடர்பான…

68 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

இஸ்லாம் மார்க்கத்தை அவமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும்…

79 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!

பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று 5 ஆம் திகதி நள்ளிரவு 11.50 இடம்பெற்றுள்ளது என பொகவந்தலாவ பொலிஸ்…

71 0 0