உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சிற்றுண்டிச்சாலையை உடைத்து திருட்டு; மூன்று சிறுமிகள் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

களுத்துறை வெர்னன் பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தின் சிற்றுண்டிச்சாலையை உடைத்து டொபி மற்றும் சொக்லேட்களைத் திருடிய மூன்று சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான சிறுமிகள் 13, 14 மற்றும் 15 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 40,000 ரூபாய் என களுத்துறை தெற்கு தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தினேஷ் சில்வா தலைமையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கெமராக்களைப் பரிசோதித்த பின்னர் சிறுமிகள் அடையாளம் காணப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து சிறுவர் இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டொபி, சொக்லேட், லொலிபொப், சூயிங்கம் மற்றும் பெப்பர்மிண்ட் தொகையொன்றை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமிகள் சிறுவர் இல்லத்தின் சாவியைத் திருடி, அதிகாலை 1.30 மணியளவில் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். பின்னர் சிற்றுண்டிச்சாலையின் முன் கண்ணாடியைப் பொல்லால் அடித்து உடைத்து, திருடிய பொருட்களைப் பொலித்தீன் பைகளில் போட்டுக்கொண்டு மீண்டும் சிறுவர் இல்லத்திற்குச் சென்று மறைத்து வைத்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

40 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.!

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘நீதிக்கான நீள் பயணம்’ என்ற நிகழ்வை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீண்ட காலமாக போராடி…

40 0 0
இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

48 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

59 0 0