உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ரணில் – இந்தியத் தூதுவர் கொழும்பில் திடீர் சந்திப்பு; அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

கொழும்பு, பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே அணியின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர். இந்தப் பேச்சு முடிவடைந்தவுடனேயே இந்தியத் தூதுவர் அவரைச் சந்தித்தமை அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதிக்கும் இந்தியத் தூதுவருக்கும் இடையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்த உத்தியோகபூர்வத் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

40 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.!

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘நீதிக்கான நீள் பயணம்’ என்ற நிகழ்வை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீண்ட காலமாக போராடி…

40 0 0
இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

48 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

59 0 0