உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மேலதிக வகுப்புக்குச் சென்ற சிறுமி உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

அனுராபுரம், கெபித்திகொல்லேவ – பதவிய பிரதான வீதியின் 18ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள பாதசாரிக் கடவையில் வான் மோதி விபத்துக்குள்ளான 9 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து நிகழ்ந்து நான்கு நாட்களுக்குப் பிறகு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு அவர் உயிரிழந்தார் என்று பதவிய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி குறித்த சிறுமி மேலதிக வகுப்பொன்றுக்குச் செல்வதற்காக வீதியை கடக்க முற்பட்ட போது, வேகமாக வந்த வான் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி உடனடியாக பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் நேற்றுமுன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் கந்தூருவெவ, போகஹவெவ பகுதியைச் சேர்ந்த சனுல்லியா என்ற 9 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.

விபத்து நிகழ்ந்த வேளையில், சிறுமியை மோதிய வான் அவ்விடத்தில் நிறுத்தப்படாமல் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தது. இருப்பினும், பின்னர் அந்த வான் சாரதி தானாகவே முன்வந்து பதவிய பொலிஸ் நிலையத்தில் வானுடன் சரணடைந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பதவிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதசாரிக் கடவையில் இடம்பெற்ற இந்த அநியாய மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

40 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.!

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘நீதிக்கான நீள் பயணம்’ என்ற நிகழ்வை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீண்ட காலமாக போராடி…

40 0 0
இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

48 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

59 0 0