உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தெமட்டகொடை இல்லத்தில் கைப்பற்றிய நகைகள் – ஒருவாரத்தில் விடுவிக்க நீதிமன்ற உத்தரவு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
41 பார்வைகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய இப்ராஹிம் இல்ஹாமின் தெமட்டகொடை மஹவில் கார்டன்ஸ் இல்லத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் மற்றும் மாணிக்கக்கற்களை ஒரு வாரத்திற்குள் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்த உத்தரவை கோட்டை நீதவான் நீதிமன்றம் நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (25.02.2025) பிறப்பித்தார். சந்தேகநபரின் சகோதரரான இஃப்லால் அஹமட் என்பவருக்கு ஒருவார காலத்திற்குள் குறித்த சொத்துகளை விடுவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதற்கு முன்பும் இதேபோன்ற உத்தரவு வழங்கப்பட்டிருந்தபோதிலும், அதை நடைமுறைப்படுத்தாமல் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை நீதவான் கடுமையாக எச்சரித்தார்.மேலும், இவ்வுத்தரவை ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றத் தவறினால், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதவான் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

42 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

58 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

54 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0