உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

யாழ். தொல்புரம் வைத்தியசாலையின் வைத்தியரின் இடமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்தக் கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

தொல்புரம் பகுதியில் அமைந்துள்ள பானாவெட்டி வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி வே. குருபரனின் இடமாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கமும், பிரதேச பொது அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.இந்த விடயம் தொடர்பான கோரிக்கை கடிதம், நேற்று (24.02.2026) வைத்தியசாலைக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் எஸ். ஸ்ரீபவானந்தராஜாவிடம் கையளிக்கப்பட்டது.

தொல்புரம், சுழிபுரம், மூளாய், பொன்னாலை, பண்ணாகம், சித்தங்கேணி உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இவ்வைத்தியசாலையினால் பயன்பெறுகின்றனர். வளப்பற்றாக்குறைகளுடன் இயங்கி வரும் இவ்வைத்தியசாலையை பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டுமெனவும் நீண்டகாலமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


வைத்தியர் வே. குருபரன் பொறுப்பேற்ற பின்னர் வைத்தியசாலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதனால், நடைபெற்று வரும் பணிகள் தடையின்றி தொடர்வதற்காக, மருத்துவர் வே. குருபரனை குறைந்தது அடுத்த இரண்டு ஆண்டுகளாவது தொடர்ச்சியாக பணியாற்ற அனுமதிக்குமாறு கோரிக்கை கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை கடிதம் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

42 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

58 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

54 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0