உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மெசிடோ நிறுவனத்தினால் நிலக்கடலை விதைகள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

மன்னார் மாவட்டம் பகுதியில் அண்மையில் வீசிய புயல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த 30 விவசாயிகளுக்கு மேட்டு நிலப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில் நிலக்கடலை விதைகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்வு இன்று (25) மெசிடோ நிறுவனம் பணிப்பாளர் யாட்சன் பிகிறாடோ தலைமையில், மன்னார் பிரதி விவசாயப் பணிப்பாளர் பணிமனை பயிற்சி மண்டபத்தில் நடைபெற்றது.


விதைகள் வழங்குவதற்கு முன்னதாக, விவசாயிகளுக்கு மேட்டு நிலப் பயிர்ச் செய்கை தொடர்பான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் வழங்கும் நோக்கில் விசேட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அந்தப் பயிற்சியை ஜெஸ்மன் மார்க் வழங்கினார்.பயிற்சியின் பின்னர் தெரிவு செய்யப்பட்ட 30 விவசாயிகளுக்கும் நிலக்கடலை விதைகள் கையளிக்கப்பட்டன.

நிகழ்வில் மெசிடோ நிறுவன பணியாளர்களும் கலந்துகொண்டு விதைகளைவழங்கினர்.புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீளமைக்க இத்தகைய உதவிகள் முக்கிய பங்கு வகிக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

42 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

58 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

54 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0