உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா: தமிழகத்திலிருந்து யாத்திரிகர்கள் வருகை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
42 பார்வைகள்

வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் வருடாந்த திருவிழாவில் பங்கேற்க தமிழகத்திலிருந்து 3 ஆயிரத்து 996 யாத்திரிகர்கள் நாளைமறுதினம் வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.ஆலயத்தின் ஆண்டு திருவிழா நாளைமறுதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

இந்த ஆன்மீக நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு தமிழகத்திலிருந்து பெருமளவிலான பக்தர்கள் கடல் மார்க்கமாக பயணம் மேற்கொள்கின்றனர்.அதன்படி, 92 விசைப்படகுகளில் 3 ஆயிரத்து 589 பேரும், 26 நாட்டுப்படகுகளில் 307 பேரும் பயணிக்கவுள்ளனர்.யாத்திரிகர்கள் இராமேஸ்வரத்தில் தேவையான சோதனைகள் மற்றும் அனுமதி நடவடிக்கைகளை நிறைவு செய்த பின்னர் கச்சதீவு நோக்கிப் புறப்படவுள்ளனர்.

இதற்காக அவர்கள் பயணிக்கும் அனைத்து படகுகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
யாத்திரிகர்களுக்கான குடிநீர், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் முன்னெச்சரிக்கையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

42 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

58 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

54 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0