உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
67 பார்வைகள்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டம் (PSTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றையதினம் (25) மன்னார் மாவட்டத்தில் கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மீனவ சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது PTA ஐ நீக்கு! PSTA சட்ட வரைவை மீள பெறுக, ஊடக சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும், நீதித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும், மனித மாண்பு பேணப்பட வேண்டும், உயிர் வாழ்வதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும், அடிப்படை மனித உரிமைகளுக்கு முரணான மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் சட்டங்களுக்கு எதிராக எமது குரலை வலுப்படுத்துவோம், ‘மக்கள் நலன் கருதி ஒருமைப்பாட்டுடன் செயற்படுவோம்’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் மஹிந்த கஹந்தகம கைது.!

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

55 0 0
இலங்கை செய்திகள்

வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு.!

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவர்லி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர் உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சம்பளக் கொடுப்பனவு தொடர்பான…

68 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

இஸ்லாம் மார்க்கத்தை அவமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும்…

79 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!

பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று 5 ஆம் திகதி நள்ளிரவு 11.50 இடம்பெற்றுள்ளது என பொகவந்தலாவ பொலிஸ்…

71 0 0