நிலத்தடியில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது.!
தணமல்வில, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரபேகெம பகுதியில் சூட்சுமமான முறையில் நிலத்தடியில் இயங்கி வந்த பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன் போது பெருமளவிலான மதுபானம் மற்றும் மதுபான உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் ‘கோடா’ பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஹம்பேகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.