உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பொருத்தமற்ற இடத்தில் எருமை மாடுகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

மனித குடியேற்றத்திற்கு அருகாமையில் பொருத்தமற்ற இடத்தில் எருமை மாடுகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை(24) மாலை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டுதலின் பேரில் சாய்ந்தமருது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுற்றுச்சூழல் பிரிவிற்கு பொறுப்பான சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரி மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் இணைந்து சம்பந்தப்பட்ட இடத்தில் பரிசோதனை மேற்கொண்டனர்.

இதன்போது மனித குடியேற்றத்திற்கு பொருத்தமற்ற இடத்தில் எருமை மாடுகளை வளர்த்து வந்த இடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் இதற்கு தொடர்புடைய நபருக்கு எதிராக பொதுமக்கள் தொல்லை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

குறித்த விடயத்தால் அயல் வீட்டாருக்கு அசௌகரியங்களும், தொந்தரவுகளும் ஏற்பட்டமை தொடர்பாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறுப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

57 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

53 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0