நபரொருவர் கொ*லை; இரு பெண்கள் கைது.!
ஹொரணை, போருவதண்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) காலை 32 வயதுடைய நபரொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
போருவதண்ட பகுதியைச் சேர்ந்த நபர் தனது வீட்டின் பக்கத்திலுள்ள மற்றுமொரு வீட்டிற்குச் சென்று கதவுகள் மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்தியுள்ளார்.
இதனால், குறித்த வீட்டினுள் இருந்த பெண் அந்த நபரின் மனைவியிடம் சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மனைவியும், மற்றைய பெண்ணும் சேர்ந்து மரக் கம்பத்தால் அந்த நபரைத் தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.