உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

யாழ். பொது நூலக நிறுவுநர் கே.எம்.செல்லப்பாவின் 130 ஆவது ஜனன தினம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

யாழ். பொது நூலக நிறுவுநர் கனகசபை முதலித்தம்பியார் செல்லப்பாவின் 130 ஆவது ஜனன தினம் யாழ்.பொது நூலகத்தில் நேற்று (24) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர் கிஷ்னேந்திரன், யாழ்.நூலகர், உதவி நூலகர், நூலக பணியாளர்கள், வாசக வட்டத்தினர், கே.எம்.செல்லப்பாவின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

புத்தூர் செல்லப்பா என அழைக்கப்படும் கனகசபை முதலித்தம்பியார் செல்லப்பா, 1933 ஆம் ஆண்டில் புத்தூரில் தன்னிடமிருந்த நூல்களைக்கொண்டு சிறியதொரு நூலகத்தை ஆரம்பித்தார்.

அதன்பின்னார், 1934 ஆண்டு ஜூன் மாதம் பொது நூலகம் அமைப்பதற்கான குழு அமைக்கப்பட்டது.

அதற்காக, தன்னிடமிருந்த நூல்களையும், பலரிடமும் சேர்த்த ஆயிரத்து 184 ரூபா 22 சதம் பணத்தையும் வழங்கினார்.

பின்னர் யாழ்.வைத்தியசாலை அருகில் வாடகை வீட்டில் 844 நூல்களுடனும், 34 பருவ இதழ்களுடனும் நூலகம் இயங்கியது.

1935 இல் யாழ்.பட்டினசபை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து வாடி வீட்டிற்கு நூலகம் மாற்றப்பட்டது.

அதன்பின்னர் 1953 ஆம் ஆண்டில் தற்போதுள்ள இடத்தில், திராவிட கலையம்சம் பொருந்திய அறிவுக்கோயிலாக அமைக்கப்பட்டது.

கே.எம் .செல்லப்பா 1896 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி பிறந்தார்.

யாழ்ப்பாண நீதிமன்றத்தில் காரியதரிசியாக பணியாற்றியதோடு, தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் புலமையாளராகவும் திகழ்ந்தார்.

ஆசியாவின் பெரும் நூலகத்தை வழங்கிய கே.எம்.செல்லப்பா, 1958 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 24 ஆம் திகதி மறைந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

57 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

53 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0