உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வர்த்தக அமைச்சு நிதி முறைகேடு: முன்னாள் செயலாளர் உட்பட மூவர் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

வர்த்தக அமைச்சில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அந்த அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியங்க மத்தும பண்டார உட்பட மூன்று சந்தேகநபர்களை இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று மாலை கைது செய்துள்ளது.


வர்த்தக அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு திட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல் குறித்த விவகாரங்கள் தொடர்பாக, ஆணைக்குழு நீண்டகாலமாக இரகசிய விசாரணைகளை மேற்கொண்டு வந்தது. இந்த விசாரணைகளின் போது திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியங்க மத்தும பண்டார மற்றும் அந்த அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஒருவரும் அடங்குவதாக ஆணைக்குழுத் தகவல்கள் கூறுகின்றன.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து மேலதிக வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

53 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

51 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0