உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தற்போதைய அரசாங்கம் ஊழலில் ஈடுபடுகிறது – திலித் ஜயவீர குற்றச்சாட்டு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

இலங்கை வரலாற்றில் இதுவரை உருவான அரசாங்கங்களில் மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சியாக தற்போதைய அரசாங்கம் விளங்குவதாக சர்வஜன அதிகாரம் அமைப்பின் தலைவர் திலித் ஜயவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், இந்த அரசாங்கம் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முறைகேடான வர்த்தகர்களை ஆதரித்து வருவதாகவும், மிகுந்த பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.


நாட்டில் இதுவரை இல்லாத அளவிலான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்று வருவதாகவும், இவை குறித்து தாம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.ஊழல் நிறைந்த கொடுக்கல் வாங்கல்களை பாதுகாப்பதே இந்த அரசாங்கத்தின் கொள்கையாக மாறியுள்ளதாகவும், அது அவர்களின் ஆழ்மனப்பாங்கில் பதிந்திருப்பதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.


“ஏழை எளிய மக்களின் பிரதிநிதிகள்எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது அதற்கு நேர்மாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.குறிப்பாக நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிலக்கரி விவகாரத்தின் தாக்கம் காரணமாக, எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாட்டின் ஏழை மக்கள் கூட இதனால் பாதிக்கப்படக்கூடும் என அவர் எச்சரித்தார்.


குறைந்த வருமானம் பெறும் மற்றும் வறிய மக்கள் மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட பல வழிகளில் கூடுதல் பொருளாதாரச் சுமையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.கிராமப்புறங்களில் கடினமான சூழ்நிலைகளில் வாழும் மக்கள்மீது இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது குறித்து தாம் கவலைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

53 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

51 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0