உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இரு சக்கர வாகனமும் பேருந்தும் மோதியதில் இளம் தம்பதியினர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

தம்புள்ளை, யாபாகம பகுதியைச் சேர்ந்த இளம் தம்பதியினர் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


யாபாகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரும், அவரது 22 வயதுடைய மனைவியுமே உயிரிழந்துள்ளனர். திருமணத்திற்குப் பின்னர் கம்பஹா பகுதியில் உள்ள ஒரு உணவு விநியோக நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர்கள், அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

விடுமுறைக்காக தம்புள்ளையில் உள்ள பெற்றோரின் இல்லத்திற்கு வந்திருந்த தம்பதியினர், மீண்டும் பணிக்குத் திரும்பும் நோக்கில் இரு சக்கர வாகனத்தில் கம்பஹா நோக்கிப் பயணித்தனர். இதன்போது, கண்டி–கொழும்பு பிரதான வீதியின் வதுபிடிவல பகுதியில் அவர்களின் இரு சக்கர வாகனம் பேருந்து ஒன்றுடன் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் யாபாகம பொது மயானத்தில் நடைபெற்றன. இதில் பெருந்திரளான உறவினர்களும் கிராம மக்களும் கலந்து கொண்டு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.இரு சக்கர வாகனப் பயணங்களில் இளைஞர்கள் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என கிராம மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

53 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

51 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0