உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் தொடரும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
24 பார்வைகள்

யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்தத் திட்டம் நிறுத்தப்படாது என திட்டவட்டமாகக் கூறினார்.


மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள மைதானத்தின் கட்டுமானப் பணிகளை, முறையான சுற்றுச்சூழல் அனுமதி செயல்முறைகள் நிறைவடையும் வரை தற்காலிகமாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவுறுத்தியிருந்தது. இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:


யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் அவசியம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. பெரிய திட்டங்களை நிறைவேற்ற, தேவையான சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப அறிக்கைகள் அவசியம். அதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் இணைந்து கூட்டு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

திட்டத்தை விரைவாகவும் தடையின்றியும் நிறைவு செய்ய வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.சுற்றுச்சூழல் அதிகார சபையின் அனுமதி கிடைத்ததும், இடைநிறுத்தப்பட்ட கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

53 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

51 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0