உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தேசிய மின்சக்தி கொள்கை மீண்டும் அமைச்சரவையில் ஒத்திவைப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

தேசிய மின்சக்தி கொள்கை இம்முறையும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும், அதனைச் சார்ந்த அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக, தேசிய மின்சக்தி கொள்கைக்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறுவது மேலும் தாமதமடைந்துள்ளது.


இதனால் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தாமதமடையும் நிலையில், அந்தச் சபை கலைக்கப்படும் திகதியை அறிவிப்பதும் பிற்போடப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் ஐந்து கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டதில் நான்கு கட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.


தேசிய மின்சக்தி கொள்கை தயாரிப்பு பணிகள் முடிவடைந்துள்ள போதிலும், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்த பின்னரே சபை கலைக்கப்படும் திகதி அறிவிக்கப்படவுள்ளது.இதற்கிடையில், குறித்த நடவடிக்கைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பெப்ரவரி 28ஆம் திகதி வெளியிடப்படும் என இலங்கை மின்சார சபை முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

53 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

51 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0