உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
60 பார்வைகள்

மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் திரேஸா மகானி (Theresa o mahony) இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24) மன்னாருக்கு வருகை தந்த நிலையில், மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் திரேஸா மகானி மற்றும் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பாக அவர் கேட்டறிந்தார். குறிப்பாக வட மாகாண ரீதியில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

மேலும் மன்னாரில் அபிவிருத்தி என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்டு வரும், காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடியுள்ளதோடு, மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ பொலிஸ் சோதனைச் சாவடி தொடர்பாகவும், இதனால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாகவும் இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தென்மராட்சியில் சோகம்; கோர விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உ**யிரிழப்பு.!

யாழ்ப்பாணம் – தென்மராட்சிப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் உந்துருளியில் பயணித்த பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மீசாலை – புத்தூர்…

57 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் இந்த அரசாங்கத்தில் அதிகரிப்பு.!

பெருந்தோட்ட மக்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் இந்த அரசாங்கத்தில் அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். நுவரெலியா லவர்ஸ்லீப் தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,…

47 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் மஹிந்த கஹந்தகம கைது.!

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

60 0 0
இலங்கை செய்திகள்

வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு.!

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவர்லி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர் உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சம்பளக் கொடுப்பனவு தொடர்பான…

71 0 0