உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

அளுத்கம பகுதியில் இருந்து சிவனடிபாத மலைக்கு சென்று தரிசனம் செய்த பின்னர் மீண்டும் தங்களது வீட்டிற்கு திரும்பிய கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச் சம்பவம் இன்று மதியம் 1.30 க்கு நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், அளுத்கம பகுதியில் இருந்து சிவனடிபாத மலைக்கு சென்று தரிசனம் முடித்து விட்டு மீண்டும் தங்களது வீட்டிற்கு திரும்பிய வேலையில் நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் ரக்காடு கிராம பகுதியில் கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் காரின் சாரதிக்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் காரில் பயணம் செய்த மூவருக்கும் தெய்வாதீனமாக எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என நல்லதண்ணி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் அதிகாரி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதாலேயே இந்த விபத்து ஏற்பட்டது எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

53 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

51 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0