உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘தாய்கிழவி’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது.!

சினிமா 7 மாதங்கள் முன்
60 பார்வைகள்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தாய்கிழவி’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். இதில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பை நிவாஸ் கே. பிரசன்னா மேற்கொண்டுள்ளார். இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே. தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.


முழுமையாகப் புதிய தோற்றத்தில் ராதிகா சரத்குமார் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பட அறிவிப்பின்போதே அவரது தோற்றம் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.முன்னோட்டக் காட்சியின் அடிப்படையில், தாய் ஒருவருக்கும் அவரது மகன்களுக்கும் இடையிலான சொத்துச் சிக்கலே கதையின் மையமாக இருப்பது தெரிய வருகிறது. எனினும் ராதிகாவின் பாத்திரம் குறித்து அதிக விவரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.


சிங்கம்புலி, முனீஸ்காந்த், பால சரவணன் ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகள் படத்திற்கு வலுவாக அமையும் என முன்னோட்டம் காட்டுகிறது. இறுதியில் இடம்பெறும் கட்சிப் பெயர்களைச் சொல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
‘தாய்கிழவி’ திரைப்படம் வரும் இருபத்தேழாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டீஸர் வெளியீடு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அனிருத் இசையமைப்பில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா…

66 0 0
சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

60 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

67 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

83 0 0