உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சிசு ஒன்று சடலமாக மீட்பு; கைது செய்யப்பட்ட தாய் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

பண்டாரவளை – பல்லகெட்டுவ கலப்பிட்டகந்த பகுதியில் நேற்று (23) சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லகெட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

பல்லகெட்டுவ பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் வீடொன்றுக்கு அருகாமையில் சிசு ஒன்று சடலமாக கிடப்பதாக பல்லகெட்டுவ பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. பின்னர் பல்லகெட்டுவ பொலிஸ் குழுவினர் சிசுவின் சடலத்தை மீட்டதோடு விசாரணைகளை ஆரம்பித்தனர்.

சந்தேகத்துக்கிடமாக சிசு கிடந்த இடத்துக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்த பெண்ணிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது, குறித்த சிசு கடந்த 17 ஆம் திகதி தனக்கே பிறந்ததாகவும் பிறக்கும்போதே இறந்து பிறந்ததால் தனது வீட்டு முற்றத்தில் சிறிய குழி தோண்டி புதைத்ததாகவும், சடலத்தை நாய் வெளியே இழுத்து போட்டுள்ளதாகவும் குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் மட்டக்களப்பு பகுதியில் உள்ள வாகனம் கழுவும் இடத்தில் தொழில் செய்து வருவதாகவும், குறித்த பெண் ஆங்காங்கே கூலி வேலை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கு உரிய பெண்ணை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும், சிசுவின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பல்லகெட்டுவ பொலிஸ் பரிசோதகர் குலரத்ன தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருவதாகவும் பல்லகெட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

44 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

54 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

28 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

62 0 0