வெலிகம துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது.!
கடந்த 2023 ஆம் ஆண்டு வெலிகமையில் ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து, இவர் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை (23) அவர் மீண்டும் நாட்டிற்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில், கைது செய்யப்பட்டுள்ளார்.