உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் எதிர்நோக்கும் பாரிய நிதிச் சுமையைக் குறைப்பதே அரசின் நோக்கம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

பிள்ளைகளின் கல்விக்காகப் பெற்றோர்கள் எதிர்நோக்கும் பாரிய நிதிச்சுமையைக் குறைப்பதில் தற்போதைய அரசு உறுதியாக இருக்கின்றது என்று பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.

அரசின் திட்டங்கள் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பெற்றோர்கள் மீதான நிதி அழுத்தத்தைக் குறைப்பது எமது அரசின் பிரதான கொள்கையாகும். இது எமது பரந்த கல்விச் சீர்திருத்தங்களின் ஒரு முக்கிய அங்கமாகும். இந்தச் சீர்திருத்தங்கள் பொதுக் கல்வியைத் தாண்டி, விசேட கல்வியை வலுப்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்துகின்றன.

மாற்றுத்திறனாளிகள் முழுமையாகச் சமூகத்துடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதே எமது இலக்காகும். நாங்கள் எவரையும் பின்னால் விட்டுச் செல்லவில்லை. உரிமை மீறப்பட்ட அனைவரையும் ஒன்றிணைத்து அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் பயணத்தையே நாம் முன்னெடுத்து வருகின்றோம். அவர்கள் நாட்டின் அபிவிருத்திக்குத் தீவிரமாகப் பங்களிப்பவர்களாக மாற்றப்படுவார்கள்.

கல்வி, சுகாதாரம் மற்றும் பொதுப் போக்குவரத்து ஆகிய துறைகளுக்காகத் தேசிய வரவு – செலவுத் திட்டத்தில் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசுக்குள் முடிவுகள் கூட்டாகவே எடுக்கப்படுகின்றன. நாங்கள் தனிப்பட்ட முடிவுகளை எடுப்பதில்லை. ஒரு கூட்டு அரசாவே செயற்படுகின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

45 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

54 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

28 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

62 0 0