உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி பண மோசடி – 16 சீனர்கள் அதிரடியாகக் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து, இணையதளம் ஊடாகப் பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 16 சீனப் பிரஜைகள் கொழும்பு 07, குருந்துவத்தை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு 05, ஜாவத்தை வீதி மற்றும் டொன் கரொலிஸ் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் தங்கியிருந்த சீனர் குழுவொன்று, சந்தேகத்துக்கிடமான முறையில் செயற்படுவதாகக் குருந்துவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய, குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் அனைவரும் பிடிபட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட அதிநவீன இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் சட்டவிரோதப் பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

23 மடிக்கணினிகள், 11 கைத்தொலைபேசிகள், 7 ரௌட்டர்கள், 9 குரல் மொழிபெயர்ப்பு இயந்திரங்கள், வரி செலுத்தப்படாத 3 ஆயிரத்து 280 வெளிநாட்டு சிகரெட்டுகள் என்பவையே சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 16 சீன ஆண்களும் இலங்கையிலிருந்து கொண்டு, வெளிநாடுகளில் உள்ள நபர்களைத் தொடர்பு கொண்டு ‘பிரிமிட்’ பாணியிலான நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்தமை முதற்கட்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளது. அத்துடன், இவர்கள் சுற்றுலா விசா நிபந்தனைகளை மீறி நீண்டகாலமாகத் தங்கியிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவர்களது விசா விவரங்கள் தொடர்பாகக் குடிவரவு குடியகல்வு திணைக்களத்துடன் இணைந்து மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

44 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

54 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

28 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

62 0 0