உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அம்பாறை மாவட்டத்தில் கையெழுத்து சேகரிக்கும் பணி முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
64 பார்வைகள்

நாட்டிலிருந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க கோரியும் புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்ற பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாத்தல் எனும் புதிய சட்டத்தையும் நீக்க கோரியும் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் கையெழுத்து சேகரிக்கின்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்றைய தினம் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாகவும் கையெழுத்து சேகரிக்கும் பணி ஒன்று இன்று காலை (22.02.2026) முன்னெடுக்கப்பட்டது.

இக் கையெழுத்து சேகரிக்கும் பணியானது வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி, மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன், சமூக செயற்பாட்டாளர் துரையப்பா காந்தன், ரெலோவின் மாவட்ட பொறுப்பாளர், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், மதகுருமார்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோரும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்து உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இந்த பணியினை முன்னெடுத்திருந்தார்கள்.

இந்த இரண்டு சட்டங்களும் எமக்கு தேவையில்லை என்று பல பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கையெழுத்து இடுவதை இங்கு அவதானிக்க முடிந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

84 0 0