உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
55 பார்வைகள்

மன்னார் நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள உணவகங்கள் தொடர்ச்சியாக பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக பொது மக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அமைவாக அடையாளப்படுத்தப்பட்ட சில உணவகங்கள் மீது சுகாதார துறையினர் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த வாரம் மன்னார் நகரசபை சுகாதார பரிசோதகர் மற்றும் மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது இயங்கி வந்த 3 உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி வைத்தியசாலை பகுதியை அண்டிய உணவகங்கள் இரண்டின் மீதும் மன்னார் உப்புக்குளம் மற்றும் பள்ளிமுனை வீதியில் இரு உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக உரிய சுகாதார நடைமுறையை பின்பற்றாமை, கழிவகற்றல் செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்படாமை, கையுறை பயன்படுத்தாமை, சுகாதாரமற்ற முறையில் உணவுகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை, சுகாதாரமற்ற முறையில் உணவு தயார் செய்தமை உள்ளடங்களாக பல்வேறு குற்றங்களை அடிப்படையாக கொண்டு உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தென்மராட்சியில் சோகம்; கோர விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உ**யிரிழப்பு.!

யாழ்ப்பாணம் – தென்மராட்சிப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் உந்துருளியில் பயணித்த பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மீசாலை – புத்தூர்…

50 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் இந்த அரசாங்கத்தில் அதிகரிப்பு.!

பெருந்தோட்ட மக்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் இந்த அரசாங்கத்தில் அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். நுவரெலியா லவர்ஸ்லீப் தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,…

44 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் மஹிந்த கஹந்தகம கைது.!

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

57 0 0
இலங்கை செய்திகள்

வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு.!

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவர்லி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர் உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சம்பளக் கொடுப்பனவு தொடர்பான…

70 0 0