உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

பாதாள உலகக் கும்பலை வேரோடு பிடுங்குவோம்; ராஜபக்ஷக்களின் ஆதரவால்தான் அது வளர்ந்தது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
40 பார்வைகள்

இலங்கையில் நீண்டகாலமாக வேரூன்றியுள்ள பாதாள உலகக் குழுக்களையும், போதைப்பொருள் மாபியாக்களையும் வேரோடு பிடுங்கி எறிவதற்கு எமது அரசு தீர்மானித்துள்ளது என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அதிரடியாகத் தெரிவித்தார்.

நாட்டின் சட்ட ஒழுங்கைச் சீர்குலைக்கும் இத்தகைய குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய எவரும், எத்தகு அதிகாரப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர், “நாட்டில் பாதாள உலகக் குழுக்கள் இந்தளவுக்குக் கட்டற்று வளர்ந்தமைக்கு கடந்த கால ஆட்சியாளர்களே பொறுப்புக் கூற வேண்டும்” என்றும் சாடினார்.

“இன்று நாடு எதிர்கொள்ளும் இந்த அச்சுறுத்தலான சூழலுக்கு ராஜபக்ஷக்களின் ஆட்சியே அடித்தளம் இட்டது. அவர்களது அரசியல் ஆதரவே இக்குழுக்கள் இன்று விஸ்வரூபம் எடுக்கக் காரணம்” என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

“இலங்கையில் பாரிய குற்றங்களைப் புரிந்துவிட்டு, வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழும் பாதாள உலகத் தலைவர்களைக் குறிவைத்து அரசு புதிய வியூகங்களை வகுத்துள்ளது. வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் சகல பாதாள உலக உறுப்பினர்களையும் சர்வதேச பிடியாணைகள் ஊடாகக் கைது செய்து, அவர்களை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வந்து சிறையில் அடைப்போம்.” – என்றும் நீதி அமைச்சர் உறுதியளித்தார்.

இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க சர்வதேச பொலிஸார் இலங்கை அரசுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், தொழில்நுட்ப ரீதியாகவும் புலனாய்வு ரீதியாகவும் இக்குற்றவாளிகளைக் கண்காணிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கெஹல்பத்தர பத்மேவின் கைபேசிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்; சிக்கப்போகும் முக்கிய நபர்கள்.!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் கெஹல்பத்தர பத்மேவிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைபேசிகளில் இருந்து ஒன்பது அரசியல்வாதிகள் மற்றும் ஏழு நடிகைகள், மொடல்கள்…

48 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல்களை நடத்தாமல் ஆட்சியை நீடிக்க அரசு சதி.!

தேர்தல்களை நடத்தாமல் தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பதற்கான சதித்திட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியினரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் செயற்பட்டு வருகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம்…

54 0 0
இலங்கை செய்திகள்

புனித மீலாதுன் நபி தினம் இன்று.!

இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் குறிக்கும் ‘மீலாதுன் நபி’ (ஈத்-ஏ-மீலாத்) புனித தினம் இன்று (26) ஆகும். உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால்…

35 0 0
இலங்கை செய்திகள்

தமிழரின் மனக்காயங்களுக்கு அதிகார அரசியலைத் தாண்டி அன்பே உண்மையான மருந்து.!

தமிழ் மக்களின் நீண்டகால வேதனைகளுக்கும், அவர்கள் சந்தித்துள்ள உளக்காயங்களுக்கும் அதிகார அரசியலையோ சலுகைகளையோ தாண்டி ‘அன்பு’ ஒன்றே உண்மையான மருந்தாக அமைய முடியும் என்று மீள்குடியேற்ற மற்றும்…

36 0 0