உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

பிரித்தானிய துணைப் பிரதமர் மற்றும் தமிழ்த் தேசியக் கட்சிகள் கொழும்பில் நேரடி சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
37 பார்வைகள்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லம்மி மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் ஆகியோருக்கும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்றுப் பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் தேசிய இனப்பிரச்சினை மற்றும் அதற்கான நிரந்தர அரசியல் தீர்வுத் திட்டங்கள் விரிவாக ஆராயப்பட்டன. தமிழ்ப் பிரதிநிதிகள் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி மற்றும் தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை பிரித்தானிய தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்தனர்.

துணைப் பிரதமர் டேவிட் லம்மி அர்த்தமுள்ள முன்னேற்றங்களுக்கு ஆதரவளிக்கவும், நீதி மற்றும் சமத்துவத்தை ஊக்குவிக்கவும் பிரித்தானியா உறுதியாக இருப்பதாகவும், தமிழ் மக்களின் குரல் சர்வதேச மட்டத்தில் தொடர்ந்தும் ஒலிப்பதைஉறுதி செய்யவும் அவர் உறுதியளித்தார்.

இந்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கெஹல்பத்தர பத்மேவின் கைபேசிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்; சிக்கப்போகும் முக்கிய நபர்கள்.!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் கெஹல்பத்தர பத்மேவிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைபேசிகளில் இருந்து ஒன்பது அரசியல்வாதிகள் மற்றும் ஏழு நடிகைகள், மொடல்கள்…

21 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல்களை நடத்தாமல் ஆட்சியை நீடிக்க அரசு சதி.!

தேர்தல்களை நடத்தாமல் தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பதற்கான சதித்திட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியினரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் செயற்பட்டு வருகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம்…

54 0 0
இலங்கை செய்திகள்

புனித மீலாதுன் நபி தினம் இன்று.!

இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் குறிக்கும் ‘மீலாதுன் நபி’ (ஈத்-ஏ-மீலாத்) புனித தினம் இன்று (26) ஆகும். உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால்…

35 0 0
இலங்கை செய்திகள்

தமிழரின் மனக்காயங்களுக்கு அதிகார அரசியலைத் தாண்டி அன்பே உண்மையான மருந்து.!

தமிழ் மக்களின் நீண்டகால வேதனைகளுக்கும், அவர்கள் சந்தித்துள்ள உளக்காயங்களுக்கும் அதிகார அரசியலையோ சலுகைகளையோ தாண்டி ‘அன்பு’ ஒன்றே உண்மையான மருந்தாக அமைய முடியும் என்று மீள்குடியேற்ற மற்றும்…

36 0 0