உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படம்.!

சினிமா 8 மாதங்கள் முன்
60 பார்வைகள்

‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசன் அவர்களின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சேயோன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பார்வைப் போஸ்டர் இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.


வெளியான போஸ்டரில், சிவகார்த்திகேயன் கிராமத்து இளைஞன் தோற்றத்தில், கையில் வேலுடன் ஆக்ரோஷமாக நிற்பது காணப்படுகிறது. அவரைச் சுற்றி மயில்கள் இடம்பெற்றுள்ள காட்சிகள், ‘சேயோன்’ என்பது தமிழ் கடவுள் முருகனை குறிக்கும் பெயராக இருப்பதால், படம் முருகனை மையப்படுத்திய கிராமத்துக் கதையாக அமையலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.“மீண்டும் ஒரு முறை இணைகிறோம்; மாபெரும் கொண்டாட்டத்திற்காக” என சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தை ‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். இசையை சந்தோஷ் நாராயணன் வழங்குகிறார். ஒளிப்பதிவை விவேக் விஜயகுமார் மேற்கொள்ள, படத்தொகுப்பை சான் லோகேஷ் கவனிக்கிறார்

.சிவகார்த்திகேயன் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில், இந்த இரண்டாவது கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் பணியாற்றி வரும் சிவகார்த்திகேயன், அந்தப் படப்பணிகள் நிறைவடைந்த பின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் இணைவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டீஸர் வெளியீடு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அனிருத் இசையமைப்பில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா…

66 0 0
சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

61 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

67 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

83 0 0