பெப்ரவரி 26, விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம்.!
தென்னிந்திய திரைப்பட உலகின் பிரபல ஜோடியாக விளங்கும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் பெப்ரவரி 26-ம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இருவரும் காதலில் இருப்பதாக நீண்டகாலமாக பேசப்பட்டாலும், தங்களது உறவை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
சமீப நாட்களாக, பெப்ரவரி 26-ம் திகதி திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அதனை அவர்கள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.திருமணம் உதய்பூரில் உள்ள அரண்மனையில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மார்ச் 4-ம் திகதி ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளதாகவும், இந்திய திரைப்பட உலகின் பல நட்சத்திரங்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.